பெண்
பெண்கள் சாதிக்க பிறக்க வில்லை
அவள் பிறப்பை சாதனைதான்
கருவில் தோன்றி
கல்லறை செல்லும் வரை
அவள் செய்யும் முயற்சிகள்
அத்தனையும் சாதனை
சிறு வயது முதல்
தோன்றும் தடைகள்
எல்லாவற்றையும் படி கற்களாக
மாற்றி வெற்றி பெறும்
செயல்கள் அனைத்தும் சாதனைதான்
பெற்றோருக்கு மகளாக
கணவனுக்கு நல்ல மனைவியாக
மாமியாருக்கு நல்ல மருமகளாக
பிள்ளைக்கு நல்ல தாயாக
சமுதாயத்திற்கு நல்ல குடிமக்களை
உருவாக்கும் செயலிலும்
நடமாடும் தெய்வமாக
மகா சக்தியாக உருவெடுத்து
அவள் செய்யும் செயல்
அனைத்தும் சாதனைதான்
பார் போற்றும் பெண்களை
போற்றவில்லை என்றாலும்
அவள் சாதனைக்கு முட்டுகட்டையாக
ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள்
எத்தனை எத்தனை
பாலியல் கொடுமைகள்
திராவக விச்சுக்கள்
வரதட்சணை கொடுமைகள்
பெண் சிசு என்றால்
கருவில் கொல்ல தூண்டுதல்
ஆணாதிக்க கொடுமைகள்
எல்லாவற்றையும் வென்று
சாதனை படைத்தது கொண்டைஇருக்கிறாள்