"சுகப்பிரசவம் தானே..?"

கடைத்தெருவுக்குப் போன நாராயணசாமிக்கு திடீர் என்று வயிற்றைக் கலக்கியது.

அருகிலிருந்த பொதுக்கழிப்பிடத்தைத் தஞ்சம் அடைந்தார்.. அப்போது பக்கத்து அறையிலிருந்து ஒரு பரிச்சயமான குரல்..

"சவுக்கியமா..?"

யாரென்று சட்டென இனம்காண இயலாத குழப்பத்தில் நாராயணசாமி பதிலளித்தார்..

"ம்ம்ம் நீங்க..?"

"ரொம்ப நாளா பார்க்கவே முடியல.."

"ம்ம்ம் ஆமாம்.. கொஞ்சம் பிஸி.."

"அப்புறம்... எப்படிப் போகுது..?"

இதைக்கூடவா கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்று அதிசயித்த நாராயணசாமி...

"ம்ம்ம் பரவாயில்ல.. சுமாரா போயிட்டு இருக்கு..?" என்றார்.

கொஞ்சநேரம் அடுத்த அறையிலிருந்து சத்தமில்லை.. பின்னர்..

"சுகப்பிரசவம் தானே..?"

நாராயணசாமிக்கு இன்னும் ஆச்சரியம்.. இப்படி ஒரு கேள்வியா என்று.. இருந்தாலும் பதிலளித்தார்..

"ம்ம்ம் அப்படிதான்.. அங்க எப்புடி..?"

மீண்டும் பக்கத்து அறையில் சற்று அமைதி.. பின்னர் அவன் சொன்னான்..

"ஹலோ.. அப்புறமா பேசறேன் மாப்பிள்ளை.. இங்க ஒரு மூதேவி கூட கூட பேசி உயிரை எடுக்குது..!"

எழுதியவர் : எனக்கு பிடித்தது (10-Mar-13, 7:23 pm)
பார்வை : 236

சிறந்த நகைச்சுவைகள்

மேலே