பெண்மையை போற்றுவோம்
கட்டிய கணவனையும் உறவுகளையும்
உபசரிக்கும் நட்குணவதியாய்
இருப்பவள் பெண்
தன் சந்ததி தழைத்து இருக்க
ஈரைந்து திங்கள் கருவை சுமந்து
பிள்ளையை ஈன்றெடுத்து தாய்மைக்கு
இலக்கணமாய் இருப்பவள் பெண்
தாய் தான் மழலைக்கு முதல் மருத்துவச்சி
தாய் பால் புகட்டி குறிப்பு அறிந்து
கண்ணின் மணி போல் காத்திடுவாள் பெண்
அறிவை புகட்டும் நல் ஆசானாய்
இருப்பவள் பெண்
பள்ளி பருவம் வந்ததும் பிள்ளையை
பள்ளியில் சேர்த்துவிட்டு பள்ளி சென்று
திரும்பும் வரை வழியோரம் விழி வைத்து
காத்திருப்பாள் பெண்
குடும்ப தேவையை கருத்தில் கொண்டு
தானும் பணிக்கு சென்று குடும்ப்பத்தை
காத்திடுவாள் பெண்
குழந்தையாய் குமரியாய் தாரமாய் தாயாய்
சிறப்பாக பரிணமிப்பவள் பெண்
தாய் காட்டும் அன்பிற்க்கும் தாரம் காட்டும்
அககரைக்கும் ஈடு இல்லை என்றும்
இதை விட
பெண் பிள்ளையை தோளில் சுமந்து அது
செய்யும் குறும்புகளை ரசித்து
தானும் குழந்தையோடு குழந்தையாய்
விளையாடி கழித்திடவே கிடைத்திடும்
பேரின்பம் இனி வருமோ துன்பம்
பெண் வீட்டின் கண் பெண்மையை போற்றுவோம்
கோவை உதயன்