மழையே நீ வந்ததை நினைத்து

முன்னொரு பொழுதில்
முறையாக வர தவறும்
உன்னை மறந்திருந்தேன்

இன்றொரு பொழுதில்
இனித்து நிற்கின்றேன்
இனிதே வரவேற்த்து
இன்றாய் வந்ததை நினைத்து

ஜன்னல்கள் திறந்ததே
ஜன்மம் ஒன்று பிறந்ததே
ஜீவிக்க முடியாமல்
ஜன்னல்கள் வேலியானதே

ஈரமான காற்றையும்
கூட்டி வருகிறாய்
ஈட்டி போல குத்துகிறாய்
ஈரமில்லா நெஞ்சில்

மணம் ஒன்று விசுதே
மண் வாசனை தூக்குதே
மனம் இறங்க மறுக்குதே
மறுகனம் உன்னால் நனையுதே

சுகமா வெட்கமா
கூணி குறுகுதே
மரங்கள் மடிய மறுக்குதே
நிமிராமல் நிலை குலையுதே

மேகத்தின் மொழியா நீ
வார்த்தையில்லா வரியாய் நீ
வானத்திற்க்கு சொந்தமா நீ
பூமிக்கு வாரிசா நீ

விடுமுறை காலம் எது உனக்கு
விருந்தாளியாக வருவது எதற்கு
விண்ணப்பிக்க வேண்டியதில்லை
விண்ணப்பமும் உனக்கு இல்லை
உன்னை விடுவிக்க மனமில்லை
உனக்கு விடுதி கட்ட விதியுமில்லை

மழையே மன்னித்து விடு
ஆயிரம் சுகம் தரும் நீயெனக்கு
அனுபவித்து அருகதியில்லா
அடியனாய் நான் உனக்கு

எழுதியவர் : மணி (11-Mar-13, 4:56 pm)
பார்வை : 133

மேலே