உயிர் கொடுத்த தமிழே!
உயிரின் உயிரே! தமிழே!
உயிர் கொடுத்தாய்
உலகுக்கு நாகரிகம் கற்றுத் தந்தாய்
எண்ணிலா இலக்கியங்கள் அள்ளித் தந்தாய்
வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தாய்
அகம் புறம் என்றே பிரித்தாய்
அகத்திலே அன்பு ஊற்றை விதைத்தாய்
புறத்திலே வீர வாழ்வை அளித்தாய்
எத்தனை எத்தனை இலக்கணங்கள் நீ கொடுத்தாய்
இரட்டைக்கிளவியிலே!
உரைநடைக்கு ஓசை நயம் கொடுத்தாய்
அடுக்குத்தொடரிலே !
அச்சம் வெகுளியை உணர வைத்தாய்
வினைத்தொகையிலே!!
முக்காலத்தையும் உணர்த்தி நின்றாய்
முத்தான முத்தமிழ் தந்தாய்
அளபெடை தந்தாய் ஆற்றல் தந்தாய்
அணி கொடுத்து செய்யுளுக்கு அழகு செய்தாய்
பகுபதம் பகாப்பதம் என்றே வார்த்தைகளை பிரித்து
வைத்தாய்
மூலிகையாலே முத்தான மருத்துவம் தந்தாய்
உன்னை என்ன சொல்லி வாழ்த்துவேன்
என் உயிர் என்பேனோ !
என் உயிரின் உயிரே !தமிழே! என்பேனோ!