ஏழைகள் என்றால் சாகத்தான் வேண்டுமா ?
நான் யார் ? என் நிழலின் வேதனை என்ன ?
என்னடா..! உலக மிது..! விடமாட்டேன் ?
இறப்பு நிகழ்ந்தாலும், மறுபிறப்பிலும்..!!
உடலில் ஏற்பட்ட சுமைகளின் காயம் வலிக்கவில்லை..,
என் மனதில் ஏற்பட்ட உன்னின் காயம் வலிக்கிறது..
சொல்லிலும் செயலிலும் வீரனாய் "நான்" இருந்தும்..!
ஏழைகளின் சுமைகளை முதுகில்
ஏற்றிகொண்டு சுகமாய் இருக்கிறேன்..
சுமைகளை நீயும் சுமக்க வேண்டும்
சுமைகளோடு என்னையும் சேர்த்து..!
அப்போதுதான் தெரியும் ..?
உனக்கும் உன் வலியை விட
என்னின் வலி என்னவென்று ?
என்னை தோல்விபெற வைத்த என்னவளின்,
என்னை பெற்றடுத்த என் தாய்.. தந்தையின்....
என்னை வளர்த்தெடுத்த காற்றலையிசையில்...!
என்னை மாற்றிவைத்த தொலைக்காட்சியில்,
என் உண்மை காதலை பயணித்த முகத்தளத்தில்,
என் சந்தோசா, துக்கத்தில், ஏக்கத்தில், கவலையிலும்...
அணைத் உணவூட்டிய அனைவருக்கும்..!
நான் இறந்தபோதிலும் என்னின் இவ்வெழுத்துக்கள்
உங்கள் அனைவருக்கும் சரணம் செய்யுமென்பதில்
எனக்கு சந்தோசமே..! நான் மீண்டும் வருவேன்...
இல்லை என்னவள்(DivyaVJ)என்னெழுத்தை பிரசுரம்
செய்வாள் இவ்வுலகம் எனக்கு இருண்டாள்..!
உணர்வுபூர்வமான உண்மை,
உள்ளங்களில் மலர்வதும்...
தொடமுடியாத தூரத்திலும்
உங்களின் பாச உணர்வை
நான் வைத்திருப்பதும்மே....!
என்னின் உண்மைக்காதல்
உலரிட வேண்டாமே ??
சுவாசிக்க வைத்த அம்மாவையே!!
சில நேரத்தில் வெறுத்தேன்..!
என்னை பெற்றெடுத்து
தோல்விமுகப் பூமியில்,
நடக்கும் இவ்வவலத்தை பார்க்கவா.!
என்னை இப்பூமியில் பெற்றாய் என....
காரணமில்லாமல் யார் மீதும்
அன்பு வருவதில்லை அந்த
காரணம் அவர்களுக்கு புரிவதில்லை..!
கண்ட கண்ட இடங்களில்
மலரும் காட்டு மலர்தான்..
எனக்கு மணம்மிருக்காது..!
எனக்கு நேசிக்கதெரியாது..!
எனக்கு யோசிக்கதெரியாது..!
இன்றுபோல் நான் என்றும்..!
நீங்கள் எதிர்பார்க்கும்
அன்புடனே..! சாக ஆசை..!
நான் உங்கள் கால் நுனிரேகையில்
கை நகக் விளிம்பில் என்றுமிருக்க..!
நீங்கள் வெட்டி அழித்தாலும்
நான் வைத்த நேசம், பாசம்,
உண்மை.. சில பொய்..
வளர்ந்து கொண்டே..!
இருக்கும் இம்மண்ணுலோகம்
மரணிக்கும் நிமிடங்கள்வரை..!
இனி நான் இழப்பதற்கு யொன்றுமில்லை
வெற்றியும் தோல்வியும், வெறும் நிகழ்வுகளே...!
என் மூலதனம் ?
நம்பிக்கையின் முயற்சியில் மட்டுமே
நடைபோட்டு கொண்டே..! என்னை,
தொற்றிக்கொண்ட நிழல்களோடு!!
புத்தியில்லா உலகமிது...!
எங்கே ?
சக்தியோடு என்னை சமர்பிக்க.!!
மக்களுக்காக மக்களால்
மக்களே செய்யுமாட்சி..
செத்தொழிந்த காலம்
தேடிப்பார்த்ததில்...
கர்மவீரர் காலத்திலல்லவோ..!
மேடுகள் இன்னும் மேடாகத்தான்.!
பள்ளங்கள் இன்னும் பள்ளமாகத்தான்..!
பரிதவிக்கும் என் மக்கள்
இன்னும் பள்ளத்திற்குள்,
மேடு.. பள்ளம்.. சமமாகும் நாள்!!
என் நாளோ ? அந்நன் நாள்..!
நான் வாழ்த்திச் செல்லும் நாள்..!
ஏழைகள் என்றால் சாகத்தான்
வேண்டுமா ? இன் நன் நாட்டில்!
என்னடா..! உலக மிது ..!
விடமாட்டேன் என் இறப்பு நிகழ்ந்தாலும்,
மறுபிறப்பிலும்!! மதுரை கருப்பு வாசகம்..!