காதல் வெல்லும்
காதல் விழிகளில்
பிரபஞ்சமே வேறுதான்!
சூரியன் சில்லென குளிரும்
வான்நிலவு சுளீர்ரென சுடும்!
சோலைவன பறவைகளின்
மொழி புரியும்!
பாலைவன கானல்நீரின்
சுவை தெரியும்!
மான்களின் வேட்டையில்
சிங்கங்கள் சிக்கித்தவிக்கும்!
மனம் வானுக்கும்
அணுகாது பூமிக்கும்
அகலாது அந்தரத்தில்
வட்டமிடும் நூல்
அறுந்த பட்டம்
போல் ஆகும்!
உள்மனது அழ
கண்களில் பீரிட்டு
ஊற்றெடுக்கும் வற்றாத
ஜீவநதிகள் இரண்டு
கண்ண தேசங்களில்
கரைப்புரண்டு ஓடும்!
உணவு உள்ளிறங்காமல்
காதல் நினைவுகளில்
தேய்ந்து உடல்
மெலிந்து அழகிய
மூன்றாம் நாள்
பிறைநிலவு ஆகும்!
நினைவுகளே மலராகும்
நினைவுகளே நாருமாகும்
நினைவுகளே கொய்திட்ட
மாலையை கையேந்தி
நினைவுக்கு சொந்தமான
நெஞ்சுக்கு அணிந்திடவே
காலம் அறியா
கடும் தவம் புரிவாய்!
காலமெல்லாம் காத்திருப்பாய்!
காதலுக்காய் பூத்திருப்பாய்!
நிச்சயம்
காதல் வெல்லும்!
காதலே வெல்லும்!
காதல் மட்டுமே வெல்லும்!