அள்ளு. தள்ளாதே. 32

அள்ளுவதும், தள்ளுவதும்.

ஈரோடு ஸ்வேமா.
போராட வாம்மா.

கேள்விபதில் பகுதியில்
பாரத்தேன். அக்கேள்வியில்,

ஒரு படைப்பாளியின்நல்லபடைப்பை
ஆராதிப்பதும்,
நன்றாக இல்லாததை
அவமதிப்பதும் சரியா?
என வினா எழுப்பியிருந்தீர்.

தங்கையின் வினாவிற்கு
தமயனின் விடையாக.

நல்லதை அள்ளுவதும்,
அல்லதை தள்ளுவதும்
இயல்புதானே ?

நல்லது மட்டுமிருந்தாலே
அது பெட்டகம்.
கண்டதும் கிடந்தால் குப்பைகூடம் .

அவமானப் பட்டவர்களே
வெகுமானமானார்கள்.
செல்லம் ஆக வளர்ந்தவர்கள்
சீர்கெட்டு போனார்கள்.

உளிக்கு உதவிய கல்லே
வணங்கப்பெறும்.
உளிக்கு தப்பிய கல்லோ
உதவாமல் போகும்.

ஏற்பது உன்னை உயர்த்தும், மறுப்பது என்னை உயர்த்தாது.

அம்புட்டுதேன்.
? ? ?.

ஜோசப் கிரகரி ரூபன்.
15.03.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (15-Mar-13, 10:21 pm)
பார்வை : 116

மேலே