என்றும் அழியாத வடுவாய்!

தமிழ் நாட்டுக் கல்லூரிச் சிகரங்களே!
தமிழ் நாட்டில் நானும் இருந்திருந்தால்
நிச்சயம் நானும் பதாகையுடன்
உங்களோடு ஒரு தமிழ் மறத்தியாய் இருந்திருப்பேன்,

காலத்தின் கட்டளையால் நான் இன்று
கடல் கடந்து கரை ஒதுங்கி நிக்கின்றேன்
அத் தளத்தில் நான் இல்லை என்றாலும்
இத் தளத்தில் நான் நேசிக்கின்றேன்
மனதார உங்கள் போராட்டத்தை,

நிச்சயம் எம் தமிழீழத்திற்கு என்
பங்களிப்பும் இருக்கும், இருந்துகொண்டே இருக்கும்
என்றும் அழியாத வடுவாய்.

என்றும் நான் உங்கள் அன்புத் தோழி
என். ஜனா (சோலை)

எழுதியவர் : (17-Mar-13, 5:42 am)
சேர்த்தது : என்.ஜனா
பார்வை : 152

மேலே