.....அழகு....
நீங்காத நேரம் - நீ
என் கண்களின் முன்
நீங்கின நேரம் - நீ
என் மனக்கண்களின் முன்
சில நேரம் இதமாய் - நீ
செடியில் உள்ள பூவாய்
சில நேரம் இரணமாய் - நீ
செடியில் உள்ள முள்ளாய்
ஆனாலும்
அத்தனையும் அழகு
அத்துணையும் அழகு
என் நட்பாய்(நண்பனாய்)-நீ...நீ..நீ..