ஒரு நண்பன் இருந்தால் ..........!
இளைஞனே
வேள்விகள் பல செய்து
தோல்விகளை
நீ - சந்தித்தாலும் .....
அப்பொழுது
தோல்வி உனக்கு
கொடூரமான
மனக்கசப்பைத் தரும் .......!
என் தோழனே
பாகற்காய் கசப்பு தான்
மருந்தென்று ஆனதால் - அதை
விருந்தாக உண்டு வாழ்கின்றனர்
நம் மக்கள்
ஆம் ....!
சிந்தித்துப்பார்
கசப்பினை உள் வைத்திருக்கும்
அந்த பாகற்காயே
கசப்பினை ஏற்று
நன்மையை நமக்குச் செய்யும் போது .,
வாழ்க்கை ஒருமுறை தான் .....
தோல்விகள் சிலமுறை தான் .....
அதில் வெற்றி மாலைகள்
பலமுறைதான் ......
நண்பன் என்னும்
நம்பிக்கைத்தூண்
உன்னுடன் இருந்தால் ........
ஒரு நண்பன் இருந்தால் ..........!