சத்தியமா ? 44

வாய்மை. 44

கேள்வி.
சத்தியமா சொல்கிறேன்
இந்த வார்த்தை தேவையா ?
பதில்.
சத்தியமா சொல்கிறேன் தேவை
யில்லை.

மெய்யாகவே உங்களுக்கு
சொல்கிறேன்.
என்றேன் நம்பவில்லை.
உண்மையாக சொல்கிறேன்.
என்றேன் நம்பவில்லை.
சரி
சத்தியமாக சொல்கிறேன்.
என்றேன்
ஏன் சார் பெரிய வார்த்தை
சொல்கிறீர்கள்? என்கிறீர்கள்.

தமிழில் சொன்ன போது
ஏற்றுக்கொள்ளாமல்
வடமொழியில் சொன்ன உடன்
பதறி உதறி சிதறி
போகிறீர்கள்.

சத்தியம் சாதாரன
வார்த்தைதான்.
தமிழில் வாக்கு,
நாக்கோடாமை என்கிறோம்.
சத்தியம் தவறாத
உத்தமர் போல் நடித்து,
சத்தியம் ஏதோ ப்ரம்
மாஸ்த்திரம் போன்று
பில்டப் கொடுப்பார்.
தமிழ் எது ? வடமொழி எது ?
என்பதே தெரியாத
தறுதலை தலைமுறை
இன்று இருக்கிறது.


உதயசூரியன் வடமொழி.
எழுஞாயிறு தமிழ்.
தெரிந்துதானே வைத்தார் அண்ணா.
ழகரம் தமிழில்
சிறப்பெழுத்து என
செப்புகிறோம். ஆனால்
TAMIL NADU எனத்தான்
பெயர் வைத்தார் அண்ணா.
இரண்டு M A படித்த
அண்ணா க்கு தெரியாதா?
தமிழ்.தமிள் எதுவென்று.
கலைஞர் ஒருபடி
இறங்கி
சன் டிவி யே தமிழ்
தானென்றார்.
சூரிய நாராயண
பண்டிதருக்கு
பரிதிமாற்கலைஞர்
என பொருள் உரைத்த
கலைஞருக்கு தெரியாதா ?
சூர்யன் வடமொழி என்று.

இதெல்லாம் இடியாப்ப
சிக்கல்.
பிறிக்க முடியாது.
பிய்க்கத்தான் முடியும்.
தமிழ்த்தாயை
வடவன் சிதைத்து விட்டான்.
நாமும் சுரணையற்று
மதத்தில் மூழ்கி,
மதுவில் குளித்து,
மொழி யிழந்து,
மனிதம் மறந்து
நாகரிக நிர்வாணிகளாக
நாணமின்றி அலைகிறோம்.

சத்தியம்
சாமியின் வார்த்தையில்லை!
சாதா வார்த்தையே !!

ஜோசப் கிரகரி ரூபன்.
24.03.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (27-Mar-13, 9:12 pm)
பார்வை : 163

மேலே