கரைசேரா காகிதஓடங்கள்
தெருவிலும்இருளென்றுதெரியாமலே
கருவிலே கண்திறக்க
ஏமாந்தன.....
கரைசேராக்கனவுகள்,
காகிதப்படகு வருமென
கானல்மழையில்
காத்திருந்து
ஏமாந்தன......
பீத்த சட்டையில்
பித்தான் அறுந்து
பத்தாம் வயது
பருவத்திலே,
பத்து ரூபாய்
பைக்கட்டுகள் வாங்க
பத்து பைசாப்
பண்ணையாரிடம்
பலமுறை ஏமாந்தன......
கிழிசல்களில் கிறுக்கி
வைத்த கனவுகள்
சிற்றுண்டியிலும்
சிறைச்சாலையிலும்
ஏமாந்து கிடந்தன....
நெருசல்களில் சிக்கிய
இலாபங்கள்,
சாலையோரப்
பொருளாதாரத்தில்
நட்டங்களாய்
ஏமாந்து கிடந்தன.......
பெட்டிக்கடையின்
பீடிக்கட்டுகளை
நம்பியே
வத்திப்பெட்டிகளின்
வாரிசுகள்
வீதிகளில்
ஏமாந்து கிடந்தன....
ஏணி பிடிக்க
இன்னொருகையில்லாத
ஏமாளிக் கதிரவன்கள்,
ஏறி ஏறி விழுந்து
ஏமாந்து கிடந்தன.......
என்றாவது ஒரு நாள்
நாமும்
ஏறிடுவோ மென்ற
நம்பிக்கையில்.......