... நட்புக்கும் மேலாய் .....

எமதினிய நட்பே....!
விழிகளை மூடி விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில்
தென்றலாய் என்னை வருடிக்கொண்டிருக்கும் உன்
நினைவுகள் தரும் இதத்தில் சுகம் காண்கையில்,
நிறைய இனிமையான சோகமான தருணங்கள்
மெதுநடை போட்டு எனை வலம் வருகின்றன...

நீ அழுதால் அழுவதற்கும், சிரித்தால் சிரிப்பதற்கும்
கண்ணாடி மட்டுமல்ல நானும் இருக்கின்றேன் என்று
நட்புக்கு பெருமை சேர்த்த உன் உன்னதம்....

எனக்கானவன் நிலைக்காமல் போன துயரான வேளையில்,
உனக்காக நான் இருக்கின்றேன் என்று துவண்டிருந்த
இவளுக்காக மணிக்கணக்காய் உருகின உன் தவிப்பு.....

ஊரே உறங்கிப் போயிருந்த நடுநிசியில்,
உறங்காமல் விழித்திருந்த என் விழிகளுக்கு,
உற்ற துணையாய் இருந்த உன் எழுத்தோவியங்கள்....

எனக்கான காலக்கெடு எப்போது நானறியேன்..
நமக்கான பிரிவினை அந்த காலன் வகுக்கும்வரை,
உனக்காக நானும் எனக்காக நீயும் ஒரு புரிதலில்....

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கவேண்டும் நம் நட்பு..
நம்மை முன்னுதாரணமாக்கி வாழட்டும்.. வாழ்த்தட்டும்..
நம் சந்ததியினரின் சந்ததியினரும்... சகலரும்......!!!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (5-Apr-13, 7:58 am)
பார்வை : 298

மேலே