மழை நேர ஜன்னல்

மழை பெய்த
பின்னிரவுகளின்
அடர் மோனம்
தீரா நினைவுப் பெருவெளியினூடே
நம்மைக் கடத்துகிறது.
மௌனத்தின் வெற்றுத் தடங்கள்
பூ பூக்கும் தருணமது.
மழை நேரத் தனிமைக்கு
தனியானதொரு அழகியல்..
சிறு சிறு துளிகளாய்
ஜன்னல் வழி
அறைக்குள் படரும்
நினைவுகளின் பிசுபிசுப்பு
உடலெங்கும் அப்பிக்கொள்கிறது..
மழை நேர
ஜன்னலாகிறேன் நான்..