விரும்புபவரை மதித்திடுவோம்

மழலையிடம் விளையாட்டா
மழலைகள் விளையாடுதா ?

ஐந்தறிவின் ஆசிகளை கேட்டு
ஆறறிவு அடக்கமாய் பெறுகிறதா ?

வையத்தில் நாம் எல்லாம் பிறப்பில்
வாழும்வரை உயிர்தான் என்கிறதா ?

நன்றி உணர்ச்சியின் சின்னம் நான்
நீயும் பெறுக என்று வாழ்த்துகிறதா ?

வாழும்வரை நமக்காக வாழுமன்றோ
உள்ளவரை நமை காத்திடும் அன்றோ !

வளர்ப்பவனை பெற்றவனாய் கருதும் நாய்
பெற்றவரை எதிரியாய் நினைத்திடும் நாம் !

நமை விரும்புபவரை நாம் மதித்திடுவோம்
நமை மதிப்பவரை நாம் விரும்பிடுவோம் !

என்றும் நன்றி உணர்வுடன்

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Apr-13, 10:12 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 63

மேலே