நான் பிடித்த வக்கீல்...

நான் பிடித்த வக்கீல்...
செய்ததெல்லாம் வெறும் சிக்கல்...

வக்கீல்களின் வெற்றி "வாய்" தான் !!!
என் வக்கீலுக்கு தெரிந்ததோ வெறும் "வாய்தா" தான்....

இவர் நான் பிடித்த வக்கீல்...
என் எதிரிக்கு மிகவும் பிடித்த வக்கீல் !!!

கொலை காரன் கூட கோர்ட்-க்கு அத்தனைமுறை வந்ததில்லை !!!

ஆனால், நான்
பல முறை வந்து போகிறேன்.......

அடிகடி வந்து போக அது என வேடந்தாங்கலா???

Casuals- இல் அவர் சொன்ன வார்த்தைகள் கவர்ச்சி!!!

ஆனால்,

கருப்பு உடையில் அவர் செய்தது வெறும் சூழ்ச்சி...

தினம் தினம் என் வீட்டிற்காக போராடி....
கடைசியில் என் அடுக்கு மாடி சென்ற இடம் மார்வாடி...

இன்று மறுபடியும் வாய்தாவிற்காக இரயிலில்......

என்னைச்சந்தியுங்கள் ஜெயில்-இல் ...

கொள்ளபடப்போவது வேறு யாரும் அல்ல என் வக்கீல்...

எழுதியவர் : ஜெகன் .ஜீ (18-Apr-13, 6:13 pm)
பார்வை : 629

மேலே