நட்சத்திரக் கவிதைகள் - 09
கலாமன்றத்தின் பரிந்துரைகளை வரவேற்கும் அனைவருக்கும் நன்றி. கீழே இருக்கும் படைப்பாளிகளை உங்கள் கருத்துகள், தேர்வுப் புள்ளிகள் மூலம் ஊக்குவியுங்கள் !
----------------------------------
மிருகம் ஈன்றிடும் தெய்வம். – ஜொ.பெலிக்ஸ்
````````````````````````````````````````````````````````````````````````
கவிதை எண் - 117306
Added by :joefelix
ஓர் அபலையின் அவஸ்தையை கோபத்தோடு கவிதையாக்கி இருக்கிறார் தோழர். இவளுக்கு என்ன நடந்தது என்று வெளிப்படையாய்ச் சொல்லாமல் சூட்சுமமாய் காட்சிகளை படம்பிடித்துக் காட்டுகிறார்.
உணர்வுப் பூர்வமான படைப்பு.
==========
ஏழைக்குடில்; ஒரு மண்குடில் – ரிகாஸ் மர்சூக்
````````````````````````````````````````````````````````````````````````
கவிதை எண் - 117297
Added by :Rikas Marzook
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் துயரங்களை குமுறல்களோடு எழுதி இருக்கிறார். இன்றைய உலகில் இப்படி எத்தனையோ பேர் இன்னல் பட்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் வாழ்கையை சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்லி இருக்கும் வரிகள் அதி அற்புதம் !
===========
காணமல் போன காதலர்கள் - ஜெனித் பிரபாகரன்
`````````````````````````````````````````````````````````````````````````````
கவிதை எண் - 117369
Added by :zenith brabagaran
யாருக்கும் புரியும் வகையில் நக்கலடித்திருக்கிறார் இந்த தோழர். குறைந்த வரிகளில் நிறைந்த பொருள். இன்றைய காலகட்டத்தில் இப்படி காதலிப்பவர்கள் யாரும் இல்லையே என்ற ஆதங்கத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். எளிமையான, அருமையான படைப்பு.
==========
நினைவுகளை ஒருமுறை – தனஞ்சன்
`````````````````````````````````````````````````````````````
கவிதை எண் - 117361
Added by :dananjan.m
ஒரு படைப்பாளி தன் எண்ணங்களை எப்படி சுவாரசியமாய் சொல்லலாம் என்பதற்கு இந்த படைப்பும் ஒரு சிறு உதாரணம். மிக எளிமையான ஒப்பீடுகளின் மூலம் வாழ்கையை விளக்குகிறார் தோழர். நல்ல படைப்பு.
==========
பிறக்குவுயிரெல்லாம் வணங்கும் தாய்!- ரா.சிவகுமார்
```````````````````````````````````````````````````````````````````````````````````
கவிதை எண் - 117371.
Added by :siva71
பெண்மையின் மேன்மை பற்றி “தாய்” என்ற ஒற்றைச் சொல்லை வைத்து மொத்த படைப்பையும் நகர்த்தி இருப்பது விசேசம். அருமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது படைப்பு. சிற்சில மாற்றங்கள் ஏற்படின் நன்று. நல்ல படைப்பு.