பெண்ணை கண்ட நொடி

அழகான பெண்ணொருத்தி
அசைந்தாட நான் கண்டேன் ;
அவள் நளினங்கள் கூத்தாடும்
நடனத்தில் நான் வீழ்ந்தேன்!

கண்ணோர மை அழகில்
மெய் குளைந்து கவிழ்ந்தேன்;
கண்ணிரண்டும் பேசும் போது
காற்றாடி போல் பறந்தேன்!

கண்ணத்து குழி இரண்டில்
என் பார்வை நட்டு வைத்தேன்;
வளர்ந்து வரும் புன்னகையை
பூ பூவாய் கொய்து கொண்டேன்!

கால் இரண்டும் மேடை தனை
முத்தம் இடும் மோகம் கண்டேன்;
கை இரண்டும் காற்றில் ஆட
எனை அழைக்கும் எண்ணம் கொண்டேன்!

கீரிடம் எனும் கூந்தல் கொஞ்சம்
கோதி விடும் ஆசை கொண்டேன்!
கிளியே உன் உதட்டின் ஓரம்
உயிரை கொஞ்சம் கட்டி வைத்தேன்;

மெலிதான இடை அசைவில்
இடம்மாறும் இதயம் என்றேன்;
கொடி போல வடிவம் கண்டு
கோடை வெயிலாய் நித்தம் கொதித்தேன்!

பெண்ணே உனை பார்க்கும் போது
பித்து பிடிக்கும் புத்தி கண்டேன்;
கோதை உனை கண்ட பின்னே
கோடி கோடி இன்பம் கொண்டேன்!

எழுதியவர் : Baveethra (22-Apr-13, 1:25 pm)
Tanglish : pennai kanda nodi
பார்வை : 218

மேலே