தன்வினை தன்னை சுடும்

வெப்பசலனங்களில்
வெந்து தணிகிறது
காடு-.

வேடந்தாங்கலுக்கு
தாகம் வரவே
விலாசம் மாற்றிக் கொண்டன
பறவைகள்-.

ஓசோன் மண்டலத்தில்
ஓட்டை போட்டுவிட்டு
உடம்பு குளிர்ச்சிக்கு
ஊட்டி போனான்
அறிவிழந்த அறிவானந்தம்-

கேலியுடன் சிரித்தன
காட்டு மரங்கள்!!!.

எழுதியவர் : சுசீந்திரன் (23-Apr-13, 9:06 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 160

மேலே