தாயா ? தாரமா ?

"தாய்யென்பவள்
கருவறையில்
என்னை சுமந்தால்

தாரம்யென்பவள்
கருவறையில்
தன்னையே சுமந்தால்

தாய் - தன்
உயிரை எனக்கு தந்தவள்

தாரம் - என்
உயிரை தன்னில் சுமந்தவள்

கடவுள் இருக்குமிடம்
கருவறையென்பர்
கருவறை இருக்குமிடம்
கோவில்யென்பர்

என் தாயும் - கோவில்
என்பேன் - அவள்
கருவறை தாங்கி
நடமாடும் தெய்வம்
என்பேன்

சிவத்தில் பாதி - சக்தி
இதை அறியாதவன்
வாழ்வில் கெட்டான் - புத்தி

தாயும் - தாரமும்
ஓன்றே இதை
அறிந்தவன்
வாழ்க்கை நன்றே"

எழுதியவர் : வ.மெய்யப்பன் (24-Apr-13, 6:56 pm)
சேர்த்தது : meyyappan
பார்வை : 393

மேலே