(மெய்) முத்தம்..

அ(க்)கம் பக்கம் பாத்துவிட்டு,
அ(ங்)கம் எல்லாம் பூக்கள் பூக்க,
எ(ச்)சில் பதித்தாய் கண்ணமெங்கும்,
இ(ஞ்)சிப் பூ இதழைப் பதித்து..

சு(ட்)டெரிக்கும் வெயிற் பொழுதில்,
த(ண்)ணீரைத் தலையில் ஊற்றியது போல,
சி(த்)திரமொன்று வரைந்த உதட்டு ஓவியம்,
செ(ந்)நீரை உரைத்தது, அது சொட்டிய வேளையிலே..

ச(ப்)தஸ்வர இசையையெல்லாம்,
ச(ம்)ஹாரம் செய்யும் ஓசையிது,
தா(ய்) தன் சேய்க்கு,
மா(ர்)பணைத்து என்றும் தருவது..

சொ(ல்)லாடல் நடக்கா வேளை,
செ(வ்)விதழ்கள் இச்சை தீர்க்கும்,
பா(ழ்)பட்டுப் போன எண்ணத்தில்,
க(ள்)ளி அவள் மட்டும் வந்திடுவாளே..

ந(ற்)றமிழ் மொழியும் போதவில்லையே,
எ(ன்) முத்தச் சுவையை விளக்கிடவே..!!

எழுதியவர் : பிரதீப் (27-Apr-13, 1:15 am)
பார்வை : 246

மேலே