நேர் முகதேர்வு

உச்சி வெயில்
உருகிவிடும் தார் ரோடு.....,
நிழலுக்கென்று
ஓதுங்கிய
தெரு நாய்கள்.......
சூடு பிடிக்கும்
இளநீர் வியாபாரம்.!
உடை நனைய
ஓரு ஜான் - வயிற்றுக்குள்
புகம்பமாய் பசியின் பிரளயம்.......
உள்ளம் எரிந்தது
உயிரின் வலியை விட
உறவிகளின் உதாசினம்........!
உடைபட்ட இதயத்தை
உரசி பார்த்த உறவுகள்...!!
ரணப்பட்ட இதயத்திற்க்கு
மருந்தாக அம்மாவின்
ஆதரவு குரல்..!!
எனக்கே என் குரல்
எதிர்ப்பு தெரிவித்தது
அனைத்தையும்
தாங்கி சென்றேன்
நேர்முக தேர்வில் கேட்டார்கள்
பணத்தின் மதிப்பு என்ன ?
இவர்களுக்கு
மனிதர்களின் மதிப்பு தெரியாது
உயிரின் மதிப்பு தெரியாது.......,
இறக்கி வைத்தேன்
இதயத்தை - கடற்கரையில்
கடல் அலையே வந்து எடுத்து செல்...!!
என் இதயத்தை..........,
என்னையும் தருவேன்
ஓரு நாள்....!!