மனம் போற்றுவோம் மனிதம் பேணுவோம்

மனிதனாய் பிறந்த
புனித பூமியிலே
மகத்துவம் செய்
எங்கும் சமத்துவம் செய் ..............

உலகமெல்லாம் உன் நாடு
இருப்பவரெல்லாம் உன் உறவுகள்
வெறுப்பவர் என்று யாருமில்லை
நேசிப்போம் அனைவரையும் ஒன்றாய் ..........

உன்னைப்போன்றவர்தான் எவரும்
உன்னைப்போலவே உணர்வும் உண்டு
உன்னை காயப்படுத்தும் எந்த செயலும்
அவரையும் காயப்படுத்தும் என்பதை மறவாதே ...

மனதளவில் கூட பிரிவு வேண்டாம்
வார்த்தைகளில் கூட வன்முறை வேண்டாம்
கனவிலும் கூட பிரிவினை வேண்டாம்
எந்த நாளிலும் மனம் போற்றுவோம் .........

உனக்கான மனமும் அவரிடமும் உண்டு
மனம் நாடினால் மனிதத்திற்கு நன்று
குறைகள் சொன்னால் குழப்பம் பிறக்கும்
குழப்பம் பிறந்தால் குடியே கெட்டுவிடும் ........

ஸ்பரிசம் கலந்த தோழமையை கொடுப்போம்
அன்பை கலந்த வார்த்தையை தெளிப்போம்
மனம் பகிர்ந்து மனிதம் தெளிவோம்
மனிதர்களை போற்றி மகிழ்வோம் .........

எழுதியவர் : வினாயகமுருகன் (2-May-13, 8:33 am)
பார்வை : 697

மேலே