விழியே உறங்கு.....!

இன்றைய துக்கம்
நாளைய விடியலில்
தேய்ந்து போகும்
விழியே உறங்கு......!

இன்று உன்னை உதாசினப்படுத்தி
உதறி தள்ளியவர்கள் நாளை
உற்சாகமாய் உன்னை வரவேற்பார்கள்
உதாசினத்தை உதறி தள்ளி
விழியே உறங்கு.....!

இன்றைய கனவு நாளை
நினைவாகும் நாளைய
நினைவு இன்று கனவாய்
மலரட்டும்
விழியே உறங்கு......!

சோதனையின் இரவாக
சாதனையின் விடியலாக
காலைச் சூரியன் உன்னை
எழுப்புவான்
விழியே உறங்கு......!

நாளைய விடியல்
உனக்காக விடிய
சித்தமாய் உள்ளது
இன்றைய இரவு
உன்னை தாழாட்ட
தயாராய் உள்ளது
விழியே உறங்கு.......!

எழுதியவர் : அலைகள் (4-May-13, 7:11 pm)
பார்வை : 153

மேலே