மூன்றே மூன்று மட்டும்!!!

சிந்தனை பட்டு சீர்கெட்டு
நிந்தனைக்குட்டும் பெற்று
சிதைந்த பிணமாய் நீயும்
வாழ்வதற்கோ---ஈன்றாள்
உந்தனை! உணர்வாயோ!
உணர்ந்தும் திருந்துவாயோ!
கந்தையே! கசடனே! குடிகாரனே!
=================================================
மக்களை மாக்களாக்கி
மதிகெடுத்து கதியதுவாக்கி
ஏவலாக்கி வாழ்கிறீர்----இவர்
வருந்தினாலும் திருந்தினாலும்
வாழ்க்கை உமக்கேது!
இருந்திடட்டும் தொண்டர்கள் இப்படியே!
===================================================
வெள்ளையரிடம் பெற்ற
சுதந்திரம் சிக்கயதோ
பாவம் கொள்ளையரிடம்!
அள்ளுகிறார் அவரே------மிஞ்சுமோ
கல்லும்மண்ணும் குடிசைவாழும்
அப்பாவியற்கும்!சொல்லுங்கள்
சனநாயக சமுதாயமே!
=====================================================
சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நன்மதி வெண்பா...
Dr.V.K.Kanniappan
04-Apr-2025

சிந்தனை நந்தவனக்...
கவின் சாரலன்
04-Apr-2025
