வஸந்தி
தட்டில் வைத்த மல்லிகை பூ இட்லியைப் பார்த்துக்கொண்டே,
செல்வி,...வசந்தி போன் பண்ணியிருந்தாள்-என்றான் கணேசன்,தன் மனைவியை பார்த்து,
"என்னவாம்".. இட்லியின் மேல் சாம்பாரை ஊற்றியவாறு கேட்டாள்.
"""ஒண்ணுமில்ல..மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆகலையாம் அரை மணி நேரமா மாமியார் மீது பராதி புராணம்.
"
"என்னவாம்"-மறுபடியும் அதே கேள்வி
ஒரு துண்டு இட்லியை பிட்டு சாம்பாரில் குளிப்பாட்டி தன் வாய்க்குள் தள்ளியவாறு மனைவியை நிமிர்ந்து பார்த்தான்,
"""எந்த நேரமும் எதற்கு எடுத்தாலும் ,எதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்காங்களாம்,எந்த வேலை செய்தாலும் அதில ஒரு குற்றம் கண்டுபிடித்து திட்டுறாங்களாம்,வீட்ல நிம்மதியே இல்லைண்ணா..இண்ணிக்கு அவர் வந்ததும் ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணணும்ணு நினைச்சிருக்கேன்ணு சொன்னாள்.
என்னவாம் -மறுபடியும் அதே கேள்வி.
ஆமா நீ ஏன் ஓரு மாதிரி பேசற"".."
ஒண்ணுமில்ல நீங்க விசயத்த சொல்லுங்க
அதான்..பேசாம தனிக்குடித்தனம் போயிடலாம் இல்லைண்ணா மாமியாரைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்திடணும்,எப்படியும் மாமனாரோட பென்சன் பணம் வருது,போதாதிற்கு நாங்களும் பணம் கொடுக்கறோம்...கடைசி காலத்தை நிம்மதியா கழிக்கிறதை விட்டுவிட்டு சின்னஞ்சிறுக அப்படி இப்படிண்ணு சந்தோசமா இருக்கிறதை கெடுத்தா என்னபண்றதுங்கறா"...
"வசந்தி சொல்றது சரிதான்.. அவ படிச்சவ விவரமான பொண்ணு..அவ புருசனும் அவ சொல்றத கேக்கறான், அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்,நமக்கும் வந்து வாய்ச்சிருக்கே அத சொல்லணும்"
"என்ன சொல்லன்னும் செல்வி"
எல்லாம் என் தலை விதி.. அதேதான் நம்ம வீட்லயும் நடக்குது.. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க
ம்... நா என்ன சொல்றது..உன் வீடு நீதான் முடிவு பண்ணிக்கணும்ணு சொல்லிட்டேன்
"ஆமா ...நமக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா இதையேத்தான் நானும் சொல்றேன் ...உங்க காதில ஏறமாட்டேங்குது"..
"செல்வி.. நா யாரைப் பற்றி பேசறேண்ணு நினைச்சிபேசற"..
"ஏன்..எல்லாம் உங்க தங்கச்சி வசந்தியயைப் பற்றிதாண்ணு எனக்கு தெரியுது.".
"இல்லைம்மா.. நான் சொல்றது உன் அண்ணன் பொண்டாட்டி வச்ந்தியைப் பற்றிம்மா.".
"என்னது"-என்ற பெரும் அதிர்ச்சியுடன் மயங்கி கணவனின் காலடியில் விழுந்தாள்செல்வி.