பிரிந்தப் பின்பும் சேர்ந்திருப்போம்
முகநூலில் புதிதாய் வாழ்க்கைப் பிரயாணம் தொடங்கியது!
புதிதான முகங்கள் புரியாத மொழிகள் அழகாக தொடங்கியது!
உண்மையான அடயாளங்களில் சில பேர்!
பொய்யான புகைப்படங்களுக்குப் பின்னால் சில பேர்!
எத்தனையோ தோழர்கள், தோழிகள் இருந்தாலும்!
உரிமையாக சிலபேரிடமே ரகசியங்கள் பரிமாரிக் கொண்டிருப்போம்!
சுவாரஸ்யமாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் அதைப் பார்க்காமல் ரகசியமாக இடம் மாறிக் கொண்டிருக்கும் இதயங்கள்!
புகைப் படங்கள் பதிவு செய்வதும் அதை பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ரசிப்பதும் வாடிக்கயான வேடிக்கை விளையாட்டு!
பல உறவுகள் இங்கே உருவாவதும்! பல உறவுகள் இங்கேப் பிரிவதும் நாள் தோறும் நடக்கும் வேலை!
நண்பர்களே நாம் எப்பொழுது பிரிவோம் என்பது மட்டுமே இங்கே கேள்விக் குறி?!
முகநூல் மூடும் வரை ஒற்றுமையாய் இருப்போம் பிரிந்தப் பின்பும் சேர்ந்திருப்போம் கைப் பேசியில் அல்லது நினைவுகளில்!