................விந்தையே...............

சிரித்துப்பேசி அலுத்துவிட்டது சிலபேர்களிடம்,
சிந்திக்கவைக்கும் உன்னுடன்பேச ஆசை !
ஆனால் நடவாதே அது !
நான் என்ன செய்யட்டும்?
பேசாதே மரங்களும் பறவைகளும் !
ஆயினும் அதுபோலே !
நினைவுகளுள் நிழல்தந்து பறக்கிறாய் நீ !
உடல்தனை மறைத்துப்போனாலும்,
உயிரைவிட்டுச்சென்றாயே துணையாய் என்னுடன் !
நான் தூயவன் என்றில்லை எனினும்,
திரிகிறேன் உன் துணையுடனேயே !
வனாந்தரமாய் வறண்டுபோன அத்துவானக்காட்டிற்குள் !
கவனமுடன் நடக்கப்பார்க்கிறேன் இடர்கள் கலைந்து !
இருக்கிறாய் நீ என்னுடன் நீயென்று தந்தையே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (15-May-13, 4:57 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 76

மேலே