காதல் விரோதம்.
அவள் தன்னை விரும்பவில்லை என்று
அமில வீச்சு நடத்தினாயோ..
அழகிய முகம் காண
அன்றாடம் காத்திருந்த உனக்கு
அம்புலி முகம் அமிலத்தில்
தவிக்க விட யார் கற்று தந்தது..
காதல்
மோகத்தின் முகவரியோ
ஆதிக்கத்தின் உறைவிடமோ..
மலரின் மணம் நுகர
யாரும் மொட்களை கசக்குவதில்லை
நீ மட்டும் ஏனோடா ..?