மறைந்த அணில்
அணில் ஆடும் முன்றில்
இனி எந்த மண்ணில்
அடுக்கு மாடி இன்று
அணில் காணோம் கண்ணில்
அணில் ஆடும் முன்றில்
அதைத் துரத்தும் பிள்ளை
தொலைக்காட்சி முன்னே
அணிற்கு நேரம் இல்லை
முன்னங் கால்களில் கனித்
தூக்கிக் கொரிக்கும் அணில்
வணக்கம் மனிதன் போல
வரமாட் டாதோ இனி
அணில் சுமந்த மணலும்
ராமர் நன்றிக் கரமும்
மனதில் சுமக்கும் பாட்டி
முதியோர் இல்லம் உருகும்
அணில் ஆடும் முன்றில்
இனி எந்தத் தோப்பில்
அணில் ஆடு இலைஈ
அழித்து A for Apple