தந்தைக்கு கைம்மாறு...
தந்தைக்கு கைம்மாறு....
நற்பண்பினை ஊட்ட பாசத்தின் சிகரமாய்...
தவறினைத் திருத்த வழிநடத்தும் ஆசானாய்...
துடுக்கான இளமைக்குத் தோள்கொடுக்க உற்ற தோழனாய்...
விழிப்புணர்ச்சி மேம்பட கல்விக்கண் நல்கிய தயாளனாய்...
உலகையே கைவசமாக்கும் உயர்கல்வி அறிவுக்கும்
ஊக்கம் தந்து உயிராய் விளங்கும் தந்தையே....!!
'இம் மகனை(ளை)ப் பெற
இவர் என்ன தவம் செய்தாரோ' என
ஊர் உலகம் மெச்சும் வண்ணம்
உலக அளவை மிஞ்சும்
உன்னத பண்பில் உயர்
நேர்மையாளன் இவனெ(ளெ)னும்
பாராட்டால் தலைசிறக்கும்
நன்நடத்தை உலகையே உமக்கு
கைம்மாறாய் எப்பொழுதும் வழங்கிடுவேன்...
அன்புமிகு மகனா(ளா)ய் தாய்தந்தையே...!!!
--- நாகினி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
