சாதிகள் இல்லையடி பாப்பா

"சாதிகள் இல்லையடி பாப்பா "
பாடிவிட்டு
போய்விட்டான் பாரதி !
இங்கே
பல சாரதிகள்
சங்கம் வைத்தல்லவா
சாதி வளர்கிறார்கள்?

அன்று
சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த தமிழன்
இன்று
சங்கம் வைத்து
சாதி வளர்கிறான் !

என்
சாதிக்காரன்
நெருப்பு மாதிரி என்று
மார்த்தட்டி கொள்கிறவனா நீ?
வெட்கப்பட்டு
அவன்
நெருப்பில்
அடுப்பு எரிந்ததேயில்லை
மாறாக
ஆட்கள்தான் எரிகிறார்கள் !!

நெல்லை
விளைவித்தவன்
சாதி பார்த்தால்
சாப்பாட்டிற்கு எங்கு போவாய் ?
நூலை
நெய்தவன்
சாதி பார்த்தால்
மானத்தை காப்பாற்ற எங்கு போவாய் ?

பிறப்பு முதல்
இறப்பு வரை
நடந்து செல்லும் தூரமே வாழ்க்கை
இதில்
சாதியென்னும்
வேகதடை நமக்கேதற்க்கு?!!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (18-Jun-13, 3:21 pm)
சேர்த்தது : sowmyasuresh
பார்வை : 107

மேலே