உனக்காக மட்டுமே

உன் கண்களும் உன் பார்வையும்
உன் காதலை சொல்கின்றன
என் மூச்சிலும் என் நெஞ்சிலும் -உன்
காதலும் பாசமும் நிரம்பி உள்ளன!
உன் முகத்திலும்
உன் கள்ளச் சிரிப்பிலும்
என் காதலின் கனவுகள் அனைத்தும்
நிறைந்தே உள்ளன
உன் செல்லப் பேச்சிலும் -உன்
உதட்டிலும் எந்தன்
காதலின் உள்ளுணர்வுகள்
உன்னோடு நான் வாழ்வேன் கண்ணே
அதற்காக -நான்
முழுவதையும் தொலைப்பேன்
உனக்கென என்
உயிரைக் கொடுப்பேன்
உலகத்தை மாற்றி
வாழ வழி சமைப்பேன்
உனக்காகவே உனக்காக மட்டுமே!

எழுதியவர் : Thishanika (19-Jun-13, 5:36 pm)
சேர்த்தது : Thilakasanthi
Tanglish : unakaaga mattumae
பார்வை : 127

மேலே