உடைத்துப் பார் ...புரியும்-தெரியும்..!!

குபேரமேடுகளை உடைத்துப் பார்
சமத்துவ சமவெளி தெரியும்

தொப்பை முதலாளியை கிழித்துப் பார்
உழைப்பின் விளைச்சல் ஒளிந்திருக்கும்

ஏழ்மையின் திரை நீக்கிப் பார்
திறமையின் பிரமீடு ஒளிரும்

கல்லாமைக் கிழிசல் தைத்துப் பார்
பகுத்தறிவு பட்டாடை பளபளக்கும்

மூடநம்பிக்கை முட்களை நீக்கிப் பார்
முன்னேற்றப் பாதை சரியாகும்....

எழுதியவர் : வீரன் தாமரை (27-Jun-13, 2:24 pm)
பார்வை : 149

மேலே