நொடிகள்
=உன்னை கண்ட நொடிகள்=
ஒரு நிமிட தியாகம் ...
உன்மேல் விழித்த யோகம் ...
காதலில் விழுந்த நேரம் ...
குழம்பிய கவிதை ஞானத்தில் ...
என் இதயம் இயம்பிய கானம் ...
இதுவே !!
"மெழுகுப் படகில் மீனவன் ,
சேலை மடிப்பில் கணவன் ,
ஏழை வனப்பில் அறவன் ,
குற்ற பிரிவில் ராமன் ,
ராவணன் சிறையில் காலன்!"
=உன்னை காதலித்த நொடிகள்=
ஒருவகை மெய் சுகம் ...
என்றும் உன்னுடன் என்றொரு எண்ணம் ...
உன் குரலை எங்கும் ஒருவித தாகம் ...
புரியாமல் பிடித்த அழகிய பித்தத்தில் ...
என் இதயம் இயம்பிய கானம் ...
இதுவே !!
"காதல் தவத்தில் அகத்தியன் ,
புனிதமெனும் அர்த்தத்தில் காதலன் ,
நவீன மோகத்தில் சோழன் ,
அயங்கார ஆடையில் துயவன் ,
சந்திர கிரகத்தில் குருடன்! "
=நீ மற்றொருவனைக் காதலித்த நொடிகள்=
வலிகளுக்குக் கண்ணீர் சன்மானம் ...
கண்ணீரின் பதிலிங்கே மௌனம் ...
முழுவதும் மறந்திட மதுபானம் ...
சவமாய் நடந்திடும் ஏக்கத்தளத்தில் ...
என் இதயம் இயம்பிய கானம் ...
இதுவே !!
"வேதனை கிறுக்கலில் கம்பன் ,
ஜடமேனும் உணர்வில் அசுரன் ,
ஞானியின் காதலில் வழக்கறிஞன் ,
காதல் கூடத்தில் மருத்துவன் ,
அனுதின கவலையில் இன்றோ ,
நான் ஒரு காதல் பித்தன்! "
காதலின் வலிகள் காதலுக்கு அல்ல; நம் நினைவிற்கு !!
ஒருவனுக்கு ஒருத்திதான் மனமே !!
மறந்திடு அவளை !!
=பிரதிப் பார்த்திபன் =