விரும்பி அழைத்தேன் விரோதிகள் என்றபோதும்

குதி கால் உயர்த்தி
மிதியடி அணியும்
உன் பாதம்
நாளும்
தழுவிட்ட
என்
கண்களின் பாக்கியம்
கைகளும் பெற
மெய் வருத்திக்
காத்திருந்த
கோலம் கண்டு
எள்ளித்
துள்ளும்
கம்மாக்கரை
கருங்கெண்டைக்
கயல் முதல்
உறுமிப்
பொறுமும்
குறும்புக்
காற்று வரை
விரும்பி
அழைத்தேன் உதவிட
விரோதிகள்
என்றபோதும்....

எழுதியவர் : நஞ்சப்பன் (3-Jul-13, 11:24 pm)
பார்வை : 96

மேலே