என்ன ஆனார் இளவரசன்(ஒரு திருமணம் இரு விதவைகள் )
காதல் காதல் காதல்
காதல் தோற்கின் சாதல் சாதல் சாதல்
காதல் ஜெயித்தும்
எதற்கு சாதல் ?
அன்று சாதி தோற்றது
காதல் ஜெயித்தது
இன்று சாதி ஜெயித்தது
காதல் தோற்றது .............
சாதனை திருமணம்
இன்று சோதனை கண்டது
பலமிழந்த காதலால்
சாதி பலம் பெற்று சிரிக்குது ..........
மாயமான் சாதியால்
மர்மமான உயிரிழப்பு
தேடினாலும் கிடைக்குமா
அந்த உயிர் வேண்டினாலும் தோன்றுமா .........
மனம் நிறைய ஆசை கொண்டு
மணக்கோலம் பூண்டவன் இன்று
மரணம் கண்டிருக்கிறேன்
ஐய்யகோ கொடுமையிலும் கொடுமை ...........
அவன் கடைசி நிமிடத்தை நினைத்துபாருங்கள்
அவன் நிலையில் உங்களை உணர்ந்து பாருங்கள்
உள்ளம் அழுததாலே உயிரை மாய்திருப்பான்
நெஞ்சம் கனத்ததாலே அவன் மாண்டிருப்பான் .....
ஆயிரம் தலைவர்கள் அறிவுரை சொல்லியும்
அடங்காத மனம் சாதியை தேடுதே
நீதியை மறந்து சாதி செழிக்குதே
மக்கள் உயிரை தினமும் கொல்லுதே .............
மனிதனை கொல்லும் சாதியின் பயணம்
அன்று தொடங்கி இன்றும் தொடருது
திருந்த வேண்டியவன் மனிதன் மட்டுமே
மாறவேண்டியது சமூகத்தின் பார்வை ...........