நாம் சந்திக்கும் பாதைகள்
எதை விடுவது?
எதைப் பெறுவது?
என் பாதையெங்கும் முட்களா?
வழி விடுவாயா?இல்லை
என்னை வளர்த்திடுவாயா ...?
நல்வழியில் நடத்திடு
கடந்து செல்லும் வழி
முட்களாயினும்...!
சில நாட்கள்
விட்டுப் பெறுவாய்
பெற்று விடுவாய்.
கலங்காதே ...!
நிறுத்திக் கொள்
இருப்பதே இன்பம்
இல்லாததே துன்பம்
நிரந்தரமில்லை என்று...!
செல்லும் பாதை நீளலாம்
சுகமானது பயணம் ...!
உன்னை மேலும் பெற்று விடு
உன்னை மேலும் விட்டுப் பெறு
உண்மை புரியும் ...!