என் காதலின் கண்ணீர் சிந்தனை
பெண் மனம்
ஆறு மாதமாய் பின்னால்
சுற்றியவன் இரண்டு
நாளாய் காணவில்லை
சே , எங்க போய்த் தொலைந்தான் ..
ஆம்பளைகளை நம்பவே கூடாது
பொறுக்கி, இனி வரட்டும் ...
மூன்றாம் நாளும் காணவில்லை
ரொம்ப அலைய வச்சுட்டனோ
ரொம்ப பந்தா பண்ணிட்டனோ
சே , எங்க போய்த் தொலைந்தான் ..
நாலாவது நாளும் காணவில்லை
அவன் வீட்டு பக்கம் போய் பார்க்கலாமா
காலையில் ஒரு முறை
மாலையில் ஒரு முறை
நடந்தாயிற்று ...காணவில்லை
சே , எங்க போய்த் தொலைந்தான் ..
ஐந்தாவது நாளும் காணவில்லை
மனதில் குழப்பம் அதிகமானது
அழகா சிரிப்பானே,
பைக் கூட ஸ்டைலா ஓட்டுவானே
எல்லாம் என்னாலத்தான்
ரொம்ப அழகுன்னு நினைப்பு
சுத்தி சுத்தி வரும்போது
மதிக்காம ,, இப்போ இது
தேவைதான் ..
ஆறாவது நாள்
மண்டை உடைந்திடும் போல வலிக்குது
மீண்டும் அவன் தெரு வழியே நடக்க
வீட்டினில் இருந்து வெளி வந்த அவன் நண்பன்
என்னைப் பார்த்து மெல்லச் சொன்னான்
'உடம்பு சரியில்லை , இப்போ பரவாஇல்லை
நாளைக்கு வந்திருவான் பஸ் ஸ்டாண்டுக்கு'
சட்டென்று கோடி கோடி
பூ பூத்தது மனதிற்குள்
'தேங்க்ஸ் அண்ணா'
என்றேன் கண்ணில்
நீர் வடிய ........