என் கணவா, உனக்கும் பெண் பிறக்க வேண்டும்
சிவநேசன்,கவிதா தம்பதிகளுக்கு மாலதி,துர்கா என இரு மகள்கள். மாலதிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.தரகரிடம் சொல்லிவைத்தனர்.சிவநேசன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சொந்த வீடு உள்ளது.இரு மகள்களுக்கும் சேர்த்து 50 பவுன் தங்க நகை வைத்திருந்தனர். கல்யாணத்திற்காக சிறிதளவு பணம் வைத்திருந்தனர்.தரகர் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதாக கூறி இருந்தார்.வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடந்தது.பெண் பார்த்தபின் மாலதியை பிடித்திருந்தது.ஆனால் அவர்கள் கேட்ட வரதட்சினை அதிகமாக இருந்தது.அதனால் அந்த சம்பந்தம் வேண்டாம் என விட்டனர்.மீண்டும் மீண்டும் அதே நடந்தது.மாலதியின் பெற்றோர் சற்று அதிகம் தந்து மாலதியின் திருமணத்தை நடத்தி வைக்க முடிவெடுத்தனர்.
அதன்படி ஒரு வரன் அமைந்தது.அவர்கள் கேட்ட வரதட்சினை அதிகமாக இருந்தது. 40 பவுன் நகையும்,வெள்ளி பொருட்களும்,திருமண செலவும் பெண் வீட்டார் செய்ய வேண்டும் என்றனர்.அனைத்தும் செய்வதாய் ஒப்புக் கொண்டனர்.துர்காவின் திருமணத்திற்கு என வைத்த 25 பவுன் நகையும் எடுக்கப்பட்டது.மாலதி அம்மா கொண்டு வந்த வெள்ளி பொருட்கள் உருக்க பட்டு மாலதிக்காக புதிய வெள்ளி பொருட்கள் உருவானது.திருமண செலவிற்காக அவர்கள் சேர்த்து வைத்த பணம் போதவில்லை.மீதம் இருந்த 10 பவுன் நகையில் இருந்து எடுத்துக் கொண்டனர். திருமணம் நன்றாக முடிந்தது.
மாலதி அழைப்பு முடிந்து செல்ல தயாரானபோது,மாலதியின் பெற்றோர் சில அறிவுரைகள் கூறினர்.அப்போது மாலதி,"அப்பா,என் திருமணத்தை நடத்த நீங்கள் பட்ட கஷ்டத்தை நினைக்கும்போது அவர்கள் நல்லாவே.. " என முடிக்கும் முன்னே சிவநேசன் மாலதியை தடுத்தார்."மாலதி, நீ நாளை வாழ போற இடம் அம்மா, அப்படி சொல்லாதே "
என்றார்.மாலதி அப்போது நினைத்தாள், துர்காவின் திருமணத்தை எப்படி நடத்தப்போகின்றனர். இவ்வளவு கஷ்டம் இருந்தும் தன் பெற்றோர் வாழ்த்தி அனுப்புகின்றனர். எங்களுக்கும் பெண் பிறக்க வேண்டும்...அப்போதுதான் என் கணவனுக்கும் "வரதட்சினை" என்பது என்ன என்று தெரியும்.