நகைச்சுவை
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு தோப்பிற பில்லாம்
பில்லை புடுங்கி
மாட்டுக்கு போட்டனாம்
மாடு பால் கொடுத்துச்சாம்
பாலை கொண்டு போய்
சாமிக்கு ஊத்தினானாம்
சாமி பூ கொடுத்துச்சாம்
பூவை கொண்டு போய்
ஆத்துல விட்டானாம்
ஆறு மீன் கொடுத்துச்சாம்
மீனை கொண்டு போய்
ஆத்தா கிட்ட கொடுத்தானாம்
ஆத்தா ஆக்க தெரியாம
மேக்க போயிடுச்சாம்..