நீ மட்டும் போதும் எனக்கு

சந்திரனும் தேவையில்லை
சூரியனும் தேவையில்லை
உன் ஒளி மட்டும் போதுமடி
நான் வாழ்வதற்கு

சத்தியமும் தேவையில்லை
சாஸ்த்திரமும் தேவையில்லை
உன் மொழி மட்டும் போதுமடி
நான் கேட்பதற்கு

நாட்களும் விரைவாய் ஓடுதடி
உன் நாமமும் தினமும் சுவைக்குதடி
உன் பூவிதழ் ஒரு கணம் சுழிக்கையில்
என் மனமும் ஒரு பக்கம் ஏனோ
கோணுதடி

நேற்றிரவு விரைவாய் போனதடி
இன்றிரவு உனக்காய் தவிக்குதடி
நாளை இரவு உன் வரவற்றால்
வேப்பிலையாய் கசக்குமடி

உண்மையை சொன்னால்
நீதான் என் உலகமடி
உயிரோடு கலந்த உதிரமடி
என் நெஞ்சிலுள்ள நான்கறைகளும்
உன் வரவால் எப்போதும் ஜொலிக்குமடி

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (25-Jul-13, 8:50 pm)
பார்வை : 1875

சிறந்த கவிதைகள்

மேலே