போரே வேண்டாம்

போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம் !
கார்கில் போரில்
இறந்தவர் பலராம்
காலம் அவர்களின்
கதையை சொல்லும் !
மண்டைக் காட்டில்
மண்டை உடைப்பு ;
சண்டைகள் செய்தார்
கிறித்துவர், இந்து
பண்டைப் போதகர்
சொன்னது இதுவா ??
பக்குவம் இல்லா
மக்களைக் கேட்பேன் !
அன்பே சமயம்
அன்பே சமணம்
அன்பே கிறித்து
அன்பே இசுலாம்
அன்பே இந்து
அனைத்து உயிர்களும்
அன்பினில் அடங்கும்
போரே வேண்டாம் !
புதுமைப் படைப்போம் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Jul-13, 5:05 pm)
பார்வை : 112

மேலே