காதலே ஒரு கல்யாணம் தான் !
இன்று கார்கில் தினம் போரில் தனது காதலனை தொலைத்த பெண்ணுக்காக கற்பனையில் !
காதலே ஒரு கல்யாணம் தான் !
அவன் எனக்கானவன் !
அவன் அழகானவன் என் கண்களுக்கு மட்டும் !
அவனுடன் வாழ்ந்த காலங்கள் யாவும் சோகங்கள் வந்ததில்லை !
என் உணர்வுகள் எல்லாம் ஒன்றாய் எழுதிய கவிதை அவன் பெயர் !
அவனுடன் வாழும் ஆசையோடு நான் !
அங்கே இந்திய எல்லையில் அவன் !
இங்கே என் கற்பனைகளின் எல்லையில் அவனும் நானும் !
நீ போர்வீரன் என்ற கர்வம் உனக்கு இருக்கலாம் !
எனக்கு நீ கனவன் என்ற கர்வம் ஒரு படி மேல் உள்ளது !
போருக்கு சென்றவன் பூவோடு வருவான் என்ற நம்பிக்கையில் என் இளமை தீயில் வெந்துக் கொண்டிருக்கிறேன் !
ஒரு கடிதம் வந்தது !
ஆசைகள் எல்லாம் நிராசையாய் போனது !
கனவுகளில் கூட என் கனவுகள் கலைந்தது !
வருவான் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு
காத்திருப்புகள் மட்டும் துணையாய் !
பூ சூட்ட வருவான் என்று என்னியிருந்தேன் !
என் பூ பறிக்க வருவான் என்று தெரியவில்லை !
படை சூழ அவன் பினமாக !
வானத்தை துளைத்துக் கொண்டிருந்த துப்பாக்கி குண்டுகள் !
இங்கே என் இதயம் வெடித்துக் கொண்டிருந்தது !
இடரும் உள்ளம் இறுதியாக நீ தந்து விட்டு
சென்ற முத்தத்தின் அனைப்போடு !