என் சுவாசமே...

மலரே
உன்னை தொட்டுவிட
நினைக்கிறேன் ...

ஆனால்
நீயோ அழகாக
புன்னகைக்கிறாய் ...

என்னை
தினமும் வரவேற்கும்
உந்தன் புன்னகை ...

என்னை
மறந்தே நான்
மகிழ்கிறேன் ...

நீயே
என்மனதில் பூத்த
புத்தம் புது பூவோ ...

உன்
நிழலிலே நித்தமும்
ஆனந்தமாய் ...

உன்
மலர்ந்த சுவாசத்தை
சுவாசித்து ...

என்
காலங்களையும் நேரங்களையும்
கடக்க நினைக்கிறேன் ...

என்
கண்ணும் நீயே ...
என் காதலும் நீயே ...

என்
இதய துடிப்பும்
என்றும் நீயே ...

எழுதியவர் : தமிழ் அழகி சிந்து (2-Aug-13, 1:20 am)
Tanglish : en suvaasame
பார்வை : 87

மேலே