பெண்ணே நீ ?

காட்டாற்று வெள்ளம்
கரைதேடும் அலைகள்!
வட்டமான நிலா
வானத்தின் எல்லை!!

வான்வெளி விண்மீன்
வானவில் ஒளிக்கலவை!
தேன்சுவைப் பலா
தித்திக்கும் கற்கண்டு!!

வீசுகின்ற தென்றல்
விடிகாலைப் பனித்துளி!
பேசுகின்ற மென்மொழி
பெய்துநின்ற மழைத்துளி!!

நடந்துவரும் பூந்தோட்டம்
நந்தவன ரோசாப்பூ!
படர்ந்திருக்கும் முல்லைக்கொடி
பாட்டிற்கெல்லாம் கருப்பொருள்!!

காய்கனி விதையென்று
காலத்திற்கேற்ற நுகர்பொருள்!
தாய்சேய் தாரமென்று
தனித்தனி அவதாரம்!!

இப்படிப் பலவாயிருந்தும்
இன்றளவும் உனக்கேன்
முப்பத்துமூன்று சதவீதம்
முறைப்படி கிடைக்கவில்லை?

வெ. நாதமணி,
04/08/2013.

எழுதியவர் : வெ. நாதமணி (4-Aug-13, 7:38 pm)
பார்வை : 90

மேலே