என் தாய்க்கு சமர்ப்பணம்

உன்னை கண்டு
என்னை மறந்தேன்!
என் கண்ணில்
உன்னை என்றும் போரிதேனே !!
உன் அன்பின்
முன்னால் கடலும் சிறிதாகும் !
உன் கண்ணீர்
எனக்கு மழையிலும் தெரியும் !!
தாயே எனக்கும்
கிடைக்குமா உன் தாயாகும் வரம் !
என்றும் நீயே
என் உயிரின் ஸ்வரம் !!
உன் உதிரம்
ஊட்டி கருவில் வளர்த்தாய் !
உன் உயிரில்
பாதியை எனக்கும் அளித்தாய் !!
என்னை பசியாற்றி
நீ பசி மறந்தாயே !
உனக்கு மட்டும் இல்லை தாயே
எத்தாய்கும் நிகழ கூடாது மரணம் !!
இவ் உலகை அளித்தாலும்
உன் தியாகத்திற்கு ஈடாகுமா!
என் உயிரையும் அளிப்பேன்
என் உயிராய் இருப்பவளும் நீயே!!
உயிரை பற்றி
எழுத அமர்ந்தேன் !
தாயே என் கண்முன்
உயிரென தூன்றியவள் நீயே !!
அப்போது தான் உணர்ந்தேன்
ஓவ்வொரு உயிரிலும் ஒரு தாயின்
வலி உள்ளது என்று !
ஆண்டவன் என் கண் முன் தோன்றினால்
அவனிடமும் கேட்பேன்
என் தாய் அனுபவித்த அந்த வழியை இனி
எத்தாயும் அனுபவிக்க கூடாது என்று !!
வானம் என்ன வானம்
அவளின் பரந்த உள்ளம் முன்பு !
அவளை பற்றி
எழுத எந்த இடமும் போதாது !
முழுதாய் எழுதிட
எனக்கு வார்த்தைகளும் கிடைக்காது !!

எழுதியவர் : வ. ரூபேஷ் பாபு (5-Aug-13, 9:53 pm)
பார்வை : 89

மேலே