வாலி நீ வாழி

திரை இசையால் எமை கவர்ந்த
வாலிபக் கவிஞன் வாலியே !
நீ காலி என்று உன்னை கல்லைரக்குள்
புதைத்து விட்டனர் !

தொலை காட்சி பெட்டியை
திருகினால் நீ விரல் தொட்டு
எழுதிய பாடல்தானே கேட்கிறது !
பின் எப்படி நீ மறிப்பாய் எங்கள்
தமிழை மறப்பாய் !

உன் கவிதைக்கும் கருத்துக்கும்
யாரும் இதுவரை வேலி போட்டதில்லை !
அதனால்தான் தமிழ் மொழி
தடையிலாமல் உன்னிடம்
பிரசவம் ஆனது
நீயும் பவரசம் ஆனாய் !

நீ இறந்ததாய் சொன்னால் நான்
நம்ப மாட்டேன்
உன் பாடல் சொல்லும்
நீ வாலி அல்ல வாழி என்று !

எழுதியவர் : (7-Aug-13, 8:07 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 78

மேலே