ஓர் ஊர்வலம் வருகிறது
![](https://eluthu.com/images/loading.gif)
மலைக் குகைச்
சிற்பங்கள்
ஒரு நாள் வீதியில்
ஊர்வலம் வந்தது
வீதியில் மனிதர்கள்
எழுந்து வந்து
தரிசனம் செய்தனர்
மனக் குகைச்
சிந்தனை சிற்ப்பங்களை
எடுத்து
சிந்தனை வீதியில்
ஊர்வலம் வந்தான் ஒருவன்.
மனிதரும் வீதியும்
தூங்கிக் கிடந்தது.
மனிதர்கள் தூங்கினால்
மத்தளம் வரிசங்கம் முழங்கி
தட்டி எழுப்பலாம்
சிந்தனையே தூங்கி கிடந்தால்
என்ன செய்வது ?
~~~~கல்பனா பாரதி~~~